பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 குறிஞ்சித் தேன் தலைவி அது உண்மைதான். தோழி : நம்முடைய தலைவர் அறிவை என்னவென்று சொல்வேன் குந்தித் தின்ருல் குன்றும் மாளும் என்று சொல்வார்கள். இப்போது எவ்வளவுதான் மிகுதியாகப் பொருள் இருந்தாலும் இது ஒரு காலத்தில் செலவழிந்துவிடும் என்றும், அப்படிச் செலவான காலத்தில் மீட்டும் பொருளை ஈட்டும் வன்மையும் செவ்வியும்இருக்கும் என்பதுநிச்சயம் அன்று என்றும் அவர் நினைக்கிறர். ஆகையால் இப்பொழுதே இன்னும் நிறையப் பொருளேச் சேமித்து வைக்க வேண்டும் என்று கருதுகிருர். வருமுன் காக்கும் அறிவுடையவராதலின் பொருள் தேடும் முயற்சியிலே அவர் எண்ணம் இப்போது செல்கிறது. தலைவி : என்ன பொருள் தேட வேண்டுமா? இங் கிருந்தபடியேதானே? தோழி : இல்லை, இல்லே. இங்கே எத்தனே பொருள் கிடைக்கப் போகிறது? சிலகாலம் வேற்று நாட்டுக் குச் சென்று பொருளேத்தேடிக் கொண்டு வந்து சேர்த்துவிட்டால் அப்புறம் கவலேயின்றி வாழலாம். - - தலவி: வேற்று நாட்டுக்கா போக வேண்டும்? அப்படியானல் என்னேயும் அழைத்துச் செல் 6ur町T? - தோழி : என்ன அறியாமை உனக்கு? ஆடவர்கள் பொருள் ஈட்டச் சென்ருல் நாமும் உடன்போக முடியுமா? அவர் போய் விரைவில் வந்துவிடுவார். தலைவி அறிவுடையவர்கள் இனிமேல் வருவனவற்றை ஆராய்வார்கள் என்று சொல்கிறயே. இனிமேல்