பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவலங் கொடியோன் 5 என்கிருர், காமர் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். அழகையுடைய சேவடி முருகன் திருவடி. அவனுடைய அடியழகு பக்தர்களுடைய உள்ளத்தைக் கவர்வது. அன்பர்களுடைய மனமாகிய வண்டுகள் இடையருமல் மொய்த்து ஈடுபடுவது. அந்த அடியழ கின் பெருமையைக் கந்தபுராண ஆசிரியர் மிகச் சிறப் பாக ஒரிடத்தில் காட்டுகிறர். சூரபன்மைேடு முருகன் போர் செய்து கொண் டிருக்கிருன் அவனுடைய மாயங்களேயெல்லாம் மாய்த் துப் போர் செய்கிருன். அவனே ஆட்கொள்ள வேண் டும் என்ற பெருங் கருணையால் அவனுக்கு முன் விசுவ ரூபம் எடுத்துக்கொண்டு நிற்கிருன். அந்தப் பெருந் திருவடிவைக் கண்ட சூரன் உள்ளத்தைக் கொள்ளே கொடுத்து நிற்கிருன். முருகனுடைய அற் புதமான அழகைக் கண்டு கண்டு அவன் தன் கண் களால் விழுங்குகிறன். கருத்து அதில் ஈடுபடுகிறது. அவனுடைய வியப்பு மேலும் மேலும் ஒங்குகிறது. முருகனுடைய சரண தாமரையைப் பார்க்கிருன், அந்த விமலமாம் சரணந்தன்னில் மேவிய எழிலிலே அவன் கண்கள் சிக்கிக் கொள்கின்றன. 'ஆ' என்ன அழகு! என்ன அழகு! மன்மதனே அழகுக்குத் தலைவன், அழகன் என்று இந்தப் பைத்தியக்கார உலகம் பிதற்றி நிற்கிறதே! ஒரு மன்மதன் அல்ல, இரண்டு மன்மதர் அல்ல; ஒரு கோடி மன்மதர்கூட அல்ல; ஆயிரங், கோடி காமருடைய அழகையெல்லாம் பிழிந்தெடுத்துத் திரட்டிலுைம் சரி, இந்த அழகனுடைய காலழகுக்கு ஈடாகுமா? இந்த விமலமாம் சரணந்தன்னில் மேய அவ்வெழிலுக்கு ஒப்பாகுமா? காலழகே இப்படியால்ை