பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 குறிஞ்சித் தேன் தலைவி : நம் தலைவர் மணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அவர் எனக்கு ஏற்றவரென்று உணர்ந்து நம்முடைய தாய் தந்தையர் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகல்லவா எனக்கு அமைதி பிறக்கும்? தோழி ஏற்றுக் கொண்டால்தான் நல்லது. ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் விடுவோமா? அறத் தோடு பொருந்திய வாழ்வு நமக்கு வேண்டும். நீ உன் காதலரிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாய். அவரே உனக்குத் தெய்வம். வேறு யாரையும் நீ மனத்தாலும் நினேக்கப் போவ தில்லே. ஆதலின் அவர் மணம் பேசுவதற்கு முதியோர்களே வரவிடுத்தால் இவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவரே உன் காதலர் என்பதை நாம் இவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அப்போதுதான் அறத்தின் வழி நின்றவர்கள் ஆவோம். அறத்தின் சார்பில், கற்புநெறி வழுவாத நிலேயில், நின்று உண்மை யைத் தெரிவிக்க நான் துணிந்து விட்டேன். கற்புக்கு இழுக்கு வரும்படி வேறு யாரையேனும் மணம் செய்விக்க இவர்கள் ஏற்பாடு செய்தாலும் செய்யலாம். அதற்கு முன்பே உண்மையை நாம் தெரிவித்துவிட வேண்டும். - தலைவி : எப்படி நீ உண்மையைத் திடீரென்று தெரி விப்பாய்? * தோழி : இதுவரையில் அதற்குரிய செவ்வி கிடைக் காமல் இருந்தது. இப்போது கிடைத்துவிட்டது. அறத்தோடு நிற்பதற்கு இதுதான் தக்க தருணம். தலைவி: இப்போது வேறு மலேகளைப் பாடுகிருள்,அகவல்