பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல் மகள் - 73 மகளாகிய குறத்தி. பூசை வேளையில் கரடியை விட்டாற்போல் இந்தப் பாட்டுக்கிடையிலே நீ எப்படி உண்மையைத் தெரிவிக்கமுடியும்? தோழி : பாட்டுப் பாடும் இந்தச் சந்தர்ப்பந்தான் ஏற் றது. இதோ இப்பொழுதே சொல்கிறேன். குறத்தி பாடிக் கொண்டிருக்கிருள். அவள் தெய் வத்தை அகவி (அழைத்து)ப் பாடுவதால் அகவல் மகள் என்ற பெயரால் அவளை வழங்குவார்கள். அவள் பாடிக் கொண்டிருக்கும் இடத்துக்குத்தோழிபோகிருள். தோழி : அகவல் மகளே, அகவல் மகளே பல கால மாக நீ தெய்வங்களே அழைத்துப் பாடும் பழக்கம் உடையவள் என்று தெரிகிறது. - குறத்தி : ஆம் அம்மா. உனக்கு எப்படித் தெரியும்? தோழி : உன் நல்ல நீண்ட கூந்தலப் பார்த்தாலே தெரிகிறதே வெள்ளே வ்ெளேரென்று கூந்தல் முழுவதுமே நரைத்திருக்கின்றதே! நீ கழுத்நில் அணிந்திருக்கிருயே சங்கு மணி மாலே; அது மாதிரி சுத்த வெள்ளேயாக இருக்கிறது உன் நன்னெடுங் கூந்தல். உனக்கு எத்தனே வயசு ஆயிற்று? - குறத்தி : எனக்கு ஆன வயசு எனக்கே நினேவில்லே அம்மா. நான் பல காலமாக மலேகளேயெல்லாம் சுற்றி வருகிறேன். தோழி : உன் பாட்டே அதைத் தெரிவிக்கிறதே. நீ போன மலேகளைப்பற்றியெல்லாம் பாடுகிருயே! எத்தனையோ மலைகளைப் பார்த்திருக்கிருய்போல் இருக்கிறது. நன்ருகப் பாடுகிறயே பாடு, பாடு;