பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 குறிஞ்சித் தேன் இன்னும் உன் பாட்டையெல்லாம் பாடு. இப் போது ஒரு பாட்டைமறுபடியும் பாடுபார்க்கலாம். குறத்தி : பாடிக்கொண்டுதானே வருகிறேன்? தோழி : இந்தப் பாட்டு அல்ல. முன்பு ஒரு தடவை அவர் மலேயைப் பாடினயே; அந்தப் பாட்டை மறுபடியும் பாடு. இன்னும் பாடுக பாட்டு; அவர் கன்னெடுங்குன்றம் பாடிய பாட்டு. என் தோழி அதைக் கேட்க வேண்டுமாம். நற்ருய் : (தனக்குள்) அவர் குன்றமா? அவர் யார்? அவர் குன்றத்தைப் பாட வேண்டுமாம்; என் மகள் கேட்க வேண்டுமாம்; அவருக்கும் இவளுக் கும் என்ன தொடர்பு? - செவிலி : (தனக்குள்) இதென்ன இந்தப் பெண் குறுக்கே வந்து பேசுகிருளே! அவர் குன்றத் தைப் பாட வேண்டும் என்கிருளே; அவர் யார்? (வெளிப்படையாகத் தோழியைப் பார்த்து). பெண்ணே, அவர் நன்னெடுங்குன்றம் என்ருயே! அவர் யார்? நாங்கள் அறியாதவர்போல் இருக் கிறதே! தோடு : ஒரு நாள் என் தோழி தினேப்புனத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு யானே வந்து புனத்தை அழிக்கத் தொடங் கியது; அதைப் பார்த்து இவள் அஞ்சி நடுங் கிள்ை. அப்போது அழகும் திறலும் உடைய மன்னன் ஒருவன் அந்த யானேயின்மேல் வேல் எறிந்து ஒட்டி இவளேக் காப்பாற்றினன். அவனு டைய வீரத்தை என்னவென்று சொல்வது! அன்று முதல் இவள் அம் மன்னனுடைய நினை