பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணில் ஆடும் முன்றில் திருமணம் ஆகிவிட்டது. காதலனும் காதலியும் இல்வாழ்க்கை நடத்தத் தொடங்கினர். மனம் ஆவ தற்கு முன் களவுக் காலத்தில் அவர்கள் சந்தித்து அளவளாவினர்கள். அப்போதெல்லாம் அவர்கள் உள்ளத்தில் அமைதி இல்லே. மறுமுறை சந்திப்பதற்கு இடையூறு நேராமல் இருக்க வேண்டுமே என்ற கவலே அவர்களுக்கு இருந்தது. சந்திக்கும் நேரம் சிறிதாகவும் பிரிந்து வாழும் நேரம் பெரிதாகவும் இருந்தன. அப்போதெல்லாம் காதலியின் மலர் போன்ற உள்ளம் பட்ட பாட்டைப் பஞ்சுதான் படுமோ! கற்பிற் சிறந்த மங்கையாக இல்வாழ்க்கையில் ஒரு கணமும் பிரியாமல் தன் தலைவனுடன் வாழத் தலைப்பட்டாள் அவள். அவள் முன்பே மிக்க எழி லுடையவள்; அறிவுடையவள்; குணநலம் சிறந்தவள். அவளுடைய எழிலே அப்போது தலைவன் நன்குணர்ந்: தான். அறிவும் குணங்களும் ஒரளவே புலப்பட்டன, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மனேக்கு அரசியாக அவள் வாழும் இக்காலத்தில் ஒரு காலேக்கு ஒருகால் அவளுடைய அழகு பொலிவு பெறுகிறது. உள்ளத்தில் எந்த விதமான கவலேயும் இல்லாமையால் அவள் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிருள். அதனால் உண்டான பூரிப்பு அவள் உடம்பிலும் தெரிகிறது. இப்போது