பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T8 -- குறிஞ்சித் தேன் அவள் எழில் நிரம்பிய மோகினியாகத் திகழ்கிருள். இந்த அழகின் முழு விளக்கத்தைக் காதலன் உணர்ந் தானே, இல்லையோ; தோழி மிக நன்ருக உணர்ந் தாள். களவுக் காலத்தில் அவளுடைய முகமும் உடம் பும் ஒரு கால் விளக்கம் பெற்றும் ஒருகால் வாட்டம் பெற்றும் இருப்பதைக் கவனித்திருக்கிருள். இயற்கை யெழில் நிரம்பியிருந்தும் களவுக் காதலுக்கு ஏதேனும் இடையூறு நிகழுமோ என்ற அச்சத்தால் அந்த எழிலிலே சில சமயங்களில் வாட்டம் தோன்றும். இப் போது அந்த மாறுதல் இல்லாமல் வர வர எழில் விளக்கத்தையே கண்டு வருகிருள் தோழி. இத்தனே அழகை இறைவன் எப்படிப் படைத்தான்!” என்று வியக்கிருள். அதுமட்டுமா? சின்னப் பெண்ணுகச் சிற்றில் இழைத்தும் சிறு சோறு அட்டும் சில ஆண்டுகளுக்கு முன் தோழியோடு விளையாடிக் கொண்டிருந்தவள் தலைவி. அதிகமாகப் பேசாமல் சில சொற்களே மழலை யாகப் பேசி வந்தாள். இன்று மனேயறத்தின் தனி யரசியாக இலங்கும் பொழுது, அவளுடைய அறி வும் குணங்களும் எவ்வளவு நன்ருக வெளிப்படு கின்றன! - ஆலம் விதையைக் காணும்போது அது மிகமிகச் சிறியதாகத் தோன்றுகிறது. அது முளைத்து மரமாகிப் பூவும் பழமுமாக நிற்கும்போது எத்தனே வியப்பாக இருக்கிறது. மரங்களிலெல்லாம் பெரிய மரமாக அப் போது அது விளங்குகிறது. அடிமரம் பருத்துக் கிளே பல கிளேத்துக் கோடும் வளாரும் இலையும் விரித்துப் பழம் பழுத்து விழுது விட்டுப் பல பறவை