பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனில் இடும் முன்றில்- 79 யினங்கள் குடும்பங்களுடன் தன் மேலே தங்கவும், அணி தேர்ப்புரவி ஆட்பெரும் படையொடு மன்னர் தன் நிழலில் தங்கவும் ஏற்ற வகையில் நிற்கிறது. 'முன்பு இருந்த சின்னஞ்சிறிய விதையா இப்படி வளர்ந்து விட்டது!?? என்று ஆச்சரியப்படுகிருேம். தலைவியைப் பார்க்கப் பார்க்கத் தோழிக்கு உண்டான வியப்பும் அத்தகையதாகவே இருக்கிறது. எழில் நிறைந்து நிற்பது போலவே அறிவும் ஆற்றலும் பண்பும் அமைதியும் அவள்பால் நிரம்பியிருக்கின்றன. ஊராரெல்லாம் போற்றும்படி வாழ்கிருள். தன் கணவ னுடைய வருவாய்க்குத் தக்கபடி செலவை அமைத் துக்கொண்டு வர வர மனேயிலே செல்வம் மிகும்படி யாகச் செய்கிருள். விருந்தினர்களே உபசரித்து மகிழ்வூட்டுகிருள். உற்றர் உறவினருக்கு வேண்டிய வற்றைச் செய்து பாதுகாக்கிருள். எந்த இடர்ப்பாடு வந்தாலும் மனம் கலங்காமல் முன்யோசனையுடன் நடந்து தைரியத்தோடு நின்று அந்த இடையூற்றை வெல்கிருள். அவளோடு பழகினவர்களுக்கும் அவள் இயல்புகள் புதியனவாக இருக்கின்றன. இத்தனை சதுரப்பாடும் இவளிடம் எவ்வாறு அமைந்தன?? என்று பாராட்டுகிறர்கள். வயது வந்த செவிலி கூட, இேவ்வளவு சிறிய பெண்ணுக்கு இவ்வளவு பேரறிவு எங்கிருந்து வந்தது?’ என்று நினைக்கிருள். இத்தனே மாட்சியும் இவளிடம் புதியனவாக வந் தனவா? இல்லை; ஆலம் விதையில் மரம் முழுவதும் கருவாக அடங்கிக் கிடந்ததுபோல இந்த உயர் நலங்கள் யாவும் இவள்பால் முன்பே அடங்கி அமைந் திருக்க வேண்டும்." கு.-7