பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குறிஞ்சித் தேன் இவ்வாறு நாளுக்கு நாள் தோழியின் வியப்பு மிகுதியாகிக் கொண்டே வந்தது. 皋 அன்று ஊரில் ஏதோ திருவிழா. வெளியூர்களி விருந்து ஊரில் உள்ளவர்களின் உற்றர் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஊர் முழுவதும் ஒரே ஆரவாரம். மக்களின் ஆரவாரப் பேச்சும், ஆடலும் பாடலும், இசைக்கருவிகளின் இன்னெலியும் எங்கும் முழங்கின. ஊருக்கே புதிய அழகு ஒன்று வந்துவிட்டதுபோல இருந்தது. - வீட்டுத் திண்ணைகளே மெழுகிச் சுண்ணும்புப் பட்டை செம்மண் பட்டை தீற்றினர்கள். வாசலில் அழகிய கோலங்களைப் போட்டார்கள். வீடுகளிலும் வீதிகளிலும் மாவில முதலியவற்றல் தோரணம் கட்டி ஞர்கள். வாழை, கமுகு, கூந்தற்பனே ஆகியவற்றைக் கொண்டுவந்து கட்டினர்கள். வீடுகள் யாவும் அலங் காரம் பெற்றுக் கல்யாணப் பெண்களேப்போலத் தோற்றின. ஊரில் வாழும் மக்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? மகளிரும் மைந்தரும் குழந்தைகளும் புதிய ஆடைகளை அணிந்து அணிகள் பலவற்றைப் பூண்டு முகத்தில் புன்னகையும் வாயில் இன்னுரையும் தவழ உலவினர்கள். அவர்கள் வீட்டுக்குள் அது காறும் மறைந்திருந்த ஆடைகளும் அணிகளும் அலங் காரப் பொருள்களும் வெளி வந்து மக்கள் மேனியை யும் வீடுகளையும் அலங்கரித்தன. விருந்தினர் பலர் வந்தமையால் பரண்மேலே போட்டிருந்த பெரிய