பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணில் ஆடும் முன்றில் 81 பெரிய பாத்திரங்களெல்லாம் வெளி வந்தன. அத்தனே பேருக்கும் விருந்து சமைக்க வேண்டும் அல்லவா? சேமித்து வைத்திருந்த உணவுப் பண்டங்கள் இப் போது பயன்பட்டன. நாள்தோறும் உண்ணும் உணவு ஒருவகை. திருவிழாவில் சமைக்கும் உணவு மிக மிகச் சிறந்தது; அறு சுவையும் பல் வகையும் அமைந்தது. பருப்பும், பாயசமும், வடையும், இனிப்புப் பண்டமும், காயும், கறியுமாக விருந்துணவு விரிந்தது. ஊரில் திருவிழா. அதனுல் இத்தனே சிறப்புக்கள் நிகழ்ந்தன. இதற்குமுன் வெளிப்படாத அலங்காரங் களும் அரும்பண்டங்களும் உவகையும் உணவு வகையும் இன்மொழியும் வெளிப்ப்ட்டன. விழாக் கொண்ட ஊரின் அழகைத் தோழி கவ னித்தாள். இத்தனை விரிவான அலங்காரப் பொருள் களும் பிற பண்டங்களும் இதற்குமுன் கண்ணில் பட வில்லை. விழா வந்தமையால் இவை வெளி வந்தன. நேற்றுவரையில் அந்த ஊர் இருந்த நிலையை அவள் அறிவாள். நல்ல ஊர்தான். எல்லா வசதிகளும் உள்ளதுதான். ஆனலும் இன்று ஊரின் தோற்றமே தனிக்களையோடு இருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஆரவாரமும் சுறுசுறுப்பும் வேகமும் இயக்கமும் அதிக மாக உள்ளன. மக்களின் தோற்றத்தில் தனி அழகு பொலிகிறது. இவற்றை யெல்லாம் தோழி கண்டு கண்டு வியந் தாள். தலைவியைப் பார்த்துத் தன் வியப்பைத் தெரிவித்தாள். இதற்கு முன் ஊர் இருந்த நிலக்கும்