பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 குறிஞ்சித் தேன் இப்போது உள்ள நிலைக்கும் எத்தனே வேறுபாடு இவ்வளவு பண்டங்களும் வெளிவராமல் உள்ளே அடங்கியிருந்தன போலும்!’ என்று கூறிள்ை. விழாவின் பெருமையே அதுதானே? ஏனைய நாட்களில் இல்லாத இயக்கமும் மகிழ்ச்சியும் ஊக்கமும் ஊரார் எல்லோருக்கும் உண்டாக வேண்டும் என்றுதானே நம் முன்னேர்கள் விழாவை அமைத்திருக்கிறர்கள்? ஒரு வீட்டில் திருமணம் நடந் தால் அந்த வீட்டைச் சார்ந்தோர் மாத்திரம் ஆடை யணி புனேந்து விருந்துண்டு மகிழ்வார்கள். திருவிழா விலோ ஊரில் உள்ள அத்தனே பேரும் மகிழ்கிருர்கள். தங்கள் தங்கள் ஆற்றலுக்கு இயைந்த அளவு அலங்காரம் செய்துகொண்டும், விருந்தினரைப் பேணி யும் இன்புறுகிருர்கள். நெடுந்துாரத்தில் உள்ள உறவினர்களையும் அழைத்து அவர்களோடு பேசிப் பழகி மகிழ்ச்சி அடைகிருர்கள். கடவுளுக்குத் திருவிழா என்று சொல்கிருேம். எப்போதும் ஆனந்த வடிவாய் இருக்கும் அவருக்குப் புதிதாக மகிழ்ச்சி வர வேண்டும் என்பது.இல்லே. கடவுளே நினேந்து விழாக் கொண் டாடிலுைம், மக்கட்கூட்டம் முழுவதும் வேறுபாடின்றி தனியுரிமை கொண்டாடாமல் யாவரும் கலந்து கொண்டு இன்புறுவதனால், மக்களுக்காகவே திருவிழா வருகின்றது என்று சொல்ல வேண்டும். கடவுளின் பெயரைச் சொல்லி மக்கள் மகிழ்கிறர்கள். தனித் தனியே ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவலேகளே . அன்றைக்கு ஓரளவு மறந்து யாவரும் ஊக்கம் பெறு கிருர்கள்’ என்று தலைவி விழாவின் தத்துவத்தை எடுத்துரைத்தாள். -