பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 குறிஞ்சித் தேன் உள்ள பல ஊர்களுக்கும் போய் வந்தவர். பல ஊர்ச் செய்திகளையும் அறிந்தவர். தாம் கண்ட கேட்ட செய்திகளே மிகவும் சுவையுடன் கூறுபவர். விருந் துணவை உண்டுவிட்டு அவர் பேசிக் கொண்டிருந் தார். வீட்டுத் தலைவனும் தலேவியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தோழியும் கேட்டாள். மிேகவும் பரிதாபமான காட்சி ஒன்றை நான் பார்த்தேன். அதை நினேத்தாலே இரக்கம் உண்டா கிறது; உள்ளம் நைகிறது?’ என்று அவர் தொடங் கினர். 'என்ன அது?’ என்று கேட்டான் தலைவன். 'மனிதனுடைய வாழ்வு எவ்வளவு நிலேயற்றது என்பதை நினைக்கும்போது வருத்தம் உண்டாகிறது. பல மாதங்களுக்கு முன் நான் வடக்கே ஒருருக்குப் போய்க் கொண்டிருந்தேன். போகும் வழியில் ஒரு சிறிய ஊர் இருந்தது. சில குடும்பங்கள் சின்னஞ் சிறிய வீடுகளேக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருந்தன. அப்போது மழை பெய்த காலம். ஏதோ பயிர் செய்து உண்டு மகிழ்ச்சியோடு அந்தக் குடும்பங்களேச் சார்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த ஊர் வழியே நான் போனேன். மரமும் செடியுமாக வழியெல்லாம் நன்றக இருந்தது. அந்த ஊரில் ஒரு நாள் தங்கி விட்டுப் போனேன். நான் தங்கின வீட்டில் இருந்தவர்கள் மிக்க அன்போடு என்னே உபசரித்தார்கள்.” ; : 'அந்த ஊரில் இருந்த தங்கள் நண்பர் யாரே னும் இறந்துவிட்டார்களோ??? இருங்கள்; சொல்லுகிறேன். ஒரு நண்பரைப் பற்றி நான் சொல்ல வரவில்ல. ஊர் முழுவதையும்