பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணில் ஆடும் முன்றில் 85 பற்றியே சொல்லுகிறேன். சில நாட்களுக்கு முன் வடக்கேயிருந்து மீண்டு வந்தேன். மறுபடியும் நான் முன்பு போன வழியிலே வந்தேன். முன்பு தங்கி னேமே, அந்த ஊரையும் பார்த்து விட்டுப் போகலாம்? என்ற ஆசை எனக்கு இருந்தது. அந்த வழி எது வென்று தேடிக் கண்டு பிடித்தேன். அதன் வழியே வந்தேன். வர வர எனக்குச் சற்று மயக்கம் உண்டா யிற்று. நான் முன்பு போனபோது அங்கே கண்ட காட்சிகளில் ஒன்றேனும் இப்போது இல்லே. வழியில் இருமருங்கும் பச்சைப் பசேலென்று மரங்கள் முன்பு இருந்தன. இப்போது எல்லாம் கரிந்து போய் மொட்டை மரங்களும் முள்செடிகளுமாக இருந்தன. பல மாதங்களாக மழை இல்லாமையால் காடெல்லாம் அழிந்து ஒரே பாலே நிலமாகிவிட்டது. வழியிலே நடக்க முடியவே இல்லே. நடப்பதற்கு அரிய வழி யாக மாறிப் போயிருந்தது. ஒன்றிலே ஆசை வைத்து விட்டால், அது அரிதென்று தெரியத் தெரிய நம் முடைய ஆசை அதிகமாகிறதே ஒழியக் குறைவ தில்லை. எப்படியாவது முன்பு சென்று தங்கின ஊரை யும் வீட்டையும் பார்த்து விட்டுப் போகவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று.?? 'ஊருக்குப் போய்ப் பார்க்க முடிந்ததா??? 'என்ன துன்பம் அடைந்தாலும் சரியென்று அந்த வழியே நடந்தேன். எளிதிலே போக முடிய வில்லே. கடைசியில் அந்த ஊர் இருந்த இடத்துக்கு வந்தேன். எத்தனே அழகிய குடிகள் அந்தச் சிற் றுாரில் இருந்தார்கள்! அந்த அங்குடிச் சிறுர் இப்போது எப்படி இருந்தது தெரியுமா? ஒரு மனிதர் இல் இல