பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 குறிஞ்சித் தேன் மக்கள் யாரும் ஊரை விட்டுப் போய்விட்டார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் நீரும் நிழலும் இல்லாத பாலே நிலமாகிவிட்டது அந்தப் பகுதி. அங்கே மக்கள் எப்படி வாழ முடியும்? விடுகள் குட்டிச் சுவர்களாக நின்றன. வீட்டு முற்றங்களில் அன்று சின்னஞ் சிறு குழந்தைகள் ஒடியாடி விளேயாடிக் கொண்டிருந்தார்கள். இன்றே அணில் ஓடியது. அதற்கு அங்கே என்ன கிடைக்கப் போகிறது? அங்கு வாழ்ந்திருந்த மக்கள் என்ன ஆனர்களோ! என்ன என்ன துன்பப் பட்டார்களோ! பல காலம் வாழ்ந் திருந்த இடத்தை விட்டுப் போவதென்பது எளிதா? அந்த அருவழியாகிய அத்தத்தில் நண்ணிய சீறுார், முன்பு அழகிய குடிகளுடன் இருந்த சர், இப்போது வெறும் மயானமாக இருந்தது. அணில் ஆடும் முன் றில் இருந்தது. வீடுகள் விளக்கமின்றி, மனிதர் நட மாட்டமின்றி இருந்தன. அதைப் பார்த்தபோது என் கண்களில் நீர் சுரந்தது. பாலே நிலத்தின் வெம் மையை எண்ணி மறுகினேன். முன்பு இருந்த நிலை என்ன!. இப்போதுள்ள நிலை என்ன!’ என்று நினைக் கும் போது இரங்காமல் என்ன செய்வது??? விருந்தினர் இந்தச் செய்தியைச் சொல்லச் சொல்லக் கவனமாக யாவரும் கேட்டார்கள். பாலே நிலத்தைப் பார்த்திராத தலைவியும் தோழியும் மக்கள் போகிய அணிலாடு முன்றிலையுடைய வீடுகளே மனத் தாலே கற்பனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கும் மனத்தில் வருத்தம் உண்டாயிற்று. தங்கள் உறவினர் களுக்குத் துயரம் வந்தது போல வருந்தினர்கள். - - 事