பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அணில் ஆடும் முன்றில் 87. தலைவன் ஏதோ வேலேயாகச் சில காலம் வெளி யூருக்குப் போயிருந்தான். அப்போது தலைவி அவ னேப் பிரிந்து வாழ்ந்தாள். அவனுடைய பிரிவில்ை அவளுக்குத் துயரம் உண்டாயிற்று. அதனுல் அவள் உடம்பு மெலியத் தொடங்கியது. அவளுடைய பேச் சில் சுவை இல்லே. உடம்பில் துடி துடிப்பில்லே. நடையில் சுறுசுறுப்பில்லே. முகத்தில் ஒளி இல்லே. தோழி இந்த நிலையைப் பார்த்தாள். முன்பு எப். படி இருந்தாள் இவளேக் கண்டு வியந்தோமே! இப் போது ஏன் இப்படியாகி விட்டாள்? நம்முடைய கண்ணே பட்டுவிட்டதோ? என்று தானே கேட்டுக் கொண்டாள். - - 'தலைவர் இன்னும் சில நாளில் வந்து விடுவார். அப்படி இருக்க, இவள் ஏன் இப்படி வாடுகிருள்?? என்று யோசித்தாள். அவளேயே கேட்டுவிட்டாள். ‘'நீ இல்வாழ்க்கை நடத்துவதைக் கண்டு எவ் வளவு இன்புற்றேன். உன் அழகும் அறிவும் பண்பும் சிறந்து விளங்குவதைக் கண்டு வியப்புற்றேனே! ஆனால், என்ன இப்படித் திடீரென்று மாறிவிட்டாயே! உன் உடம்பிலே வாட்டமும் உள்ளத்திலே சோர்வும் வரக் காரணம் என்ன?’ என்று தோழி தலைவியைக் கேட்டாள். அவள் விடை சொன்னுள்: தோழி, நான் வேண்டுமென்று இந்த வாட் டத்தை வருவித்துக் கொள்ள வில்லை. என் காதலர் என் அருகில் இருந்தால் இயல்பாகவே என் உயிரும் உள்ளமும் உடம்பும் தளிர்த்துச் சிறக்கின்றன. அவர் அருகில் இல்லாமல் சென்ருலோ எல்லாம் மாறிவிடு