பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 குறிஞ்சித் தேன் கின்றன. நாகை நினத்துச் செய்வதல்ல இது. காதலர் தம் கடமையைச் செய்வதற்கே சென்ருர், மீண்டு வருவாரென்பது எனக்குத் தெரியும். ஆயினும் என் உள்ளம் வாடுகிறதே! என் செய்வேன்! காதலர் என்னுழை இருந்தால் நான் நிச்சயமாக மகிழ்ச்சி அடைகிறேன். என்னேப் பார்த்து யாவரும் வியக்கும் வண்ணம் நான் பெரிதும் உவந்து விளக்கம் பெற் றிருக்கிறேன். அன்று இவ்வூரில் திருவிழா வந்த போது இந்த ஊரைக் கண்டு நீ வியந்து நின்ருய் அல்லவா? காதலர் உழையில் இருந்தால் விழாவைக் கொண்ட ஊரைப் போல நான் பேருவகையுடன் விருப்பத்தோடு வாழ்வேன். இதில் யாதும் தடை 33 . بتونات (تكري 'நானும் அன்று அப்படித்தான் நினத்தேன். ஊரில் விழவுக்காட்சியும் உன் அழகுக்காட்சியும் ஒன்றையொன்று உவமையாகச் சொல்லும்படி இருந்தன.” 'ஆல்ை,என் காதலர் என்னே அகலும் ஞான்றே நான் வருத்தம் அடைகிறேன். மற்ருெரு நாள், நம் முடைய வீட்டுக்கு வந்த விருந்தினர், அரிய வழியில் நண்ணிய சிறிய ஊரைப்பற்றிச் சொன் னுரே, நினே விருக்கிறதா? மக்கள் போய்விட்ட அணிலாடு முன்றி லேப் பற்றியும் அதையுடைய தனி வீட்டைப் பற்றியும் சொன்னர் அல்லவா? என் காதலர் என்னே விட்டு அகன்ருல், மக்கள் போய்விட்ட அணிலாடு முன்றிலே யுடைய அந்த இல்லைப்போலப் பொலிவழிந்து புல் ல்ென்று அலப்பேன் (வருந்துவேன்.) இது நானகச் செய்துகொள்வதல்ல. என் இயற்கை இது. எனக்குப்