பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணில் ஆடும் முன்றில் _জg~ பழைய வளப்பமும் ஊக்கமும் வரவேண்டுமானல் தலைவர் வரவேண்டும். அவர் வந்துவிட்டாரானல் அவை தாமே வந்து நிரம்பும்.” - காதலர் உழையர் ஆகப் பெரிதுஉவந்து சாறுகொள் ஊரிற் புகல்வேன் மன்ற, அத்தம் கண்ணிய அங்குடிச் சீறுார் மக்கள் போகிய அணில்ஆடும் முன்றிற் புலப்பில் போலப் புல்லென்று அலப்பென், தோழி, அவர் அகன்ற ஞான்றே. தோழி, என்னுடைய காதலர் என் பக்கத்தில் இரு ந் தால் மிகவும் மகிழ்ந்து, திருவிழாவை யுடைய ஊர் விளக்கம் பெற்றிருப்பது போல விரும்பி மகிழ்வேன்; இது நிச்சயம். ஆனல் அவர் என்னைப் பிரிந்த காலத்தில், நடத்தற்கு அரிய் வழியில் உள்ள முன்பு அழகிய குடிகள் வாழ்ந்த சிறிய ஊளில், மக்கள் போய்விட்ட, அணில் ஒடி ஆடுகிற முற்றத் தையும் தனிமையையும் உடைய வீடு போலப் பொலி வழிந்து வருந்துவேன். - - உழையர்-பக்கத்தில் உள்ளவர்; உழை-பக்கம்: பெரிது- மிகுதியாக. சாறு-விழா. ஊரின்-ஊரைப்போல புகல்வேன்-விரும்பி மகிழ்வேன். மன்ற-நிச்சயமாக. அத்தம்-கடத்தற்கு அரிய பாலை நில வழியில். சிறுார்சிறு ஊர். போகிய-போய்விட்ட முன்றில்-முற்றத்தை உடைய புலப்பில்-புலம்பு இல்; தனிமையையுடைய வீடு; தனிமை யென்றது மக்கள் இல்லாத தன்மையைச் சுட்டி யது. புல்லென்று - பொலிவை இழந்து, அலப்பென்வருந்துவேன். அவர்-காதலர். அகன்ற ஞான்று-பிரிந்து சென்ற காலத்தில். ஏ: அசை நிலை. * х துறை பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக் - குக் கிழத்தி உரைத்தது. (வேறுபாடு - மாறுதல். கவன்ற - கவலைப்பட் ட. கிழத்தி-தலைவி.) - ~