பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 குறிஞ்சித் தேன் இது குறுந்தொகையில் நாற்பத்தோராவது பாட்டு. - இதனைப் பாடிய புலவருக்கு இயல்பாக அமைந்த பெயர் இன்னதென்று தெரியவில்லே. அவர் தாம் பாடிய இந்தப்பாட்டில்அணிலாடு முன்றில் என்ற தொட ரால் அழகிய உவமை ஒன்றைப் புலப்படுத்துகிறர். இந்தப் பாட்டைப் படிக்கிறவர்களுக்கு அணிலாடு முன்றில் எப்பேர்தும் நினேவில் இருக்கும். - இதைப் புாடின புலவர் பெயர் இன்னதென்று தெரியாவிட்டாலும், இந்த அழகிய தொடர் ஒன்றே அவரை நினைவூட்டப் போதுமானது. ஆகவே பழங் காலத்தில், இந்தப் பாட்டைப் பாடிய அவரை அணிலாடு முன்றிலார் என்றே வழங்கலானர்கள். இப்படித் தாம் பாடிய பாடல்களில் வரும் சொற் ருெடர்களால் பெயர் பெற்ற சங்கப் புலவர்கள் பலர் உண்டு.