பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவிக் குடும்பம் தோழி அதோ பார் அந்தக் குருவியை. எவ்வளவு அழகாக இருக்கிறது! தத்தித் தத்திக் குதிக்கிறது. தலைவி அதைப் பார்த்தால் எனக்கு வாடிய ஆம்பற், பூ நினைவுக்கு வருகிறது. தோழி : சரியான உவமை. சிறகுகளே விரிக்க்ாமல் அது கீழே நிற்கும்பொழுது வாடிய ஆம்பற் பூவைப் போலவேதான் தோன்றுகிறது. கூம்பிய (மூடிய) சிறகுடன் இறக்கும்போது அதற்கு நீ சொன்ன உவமை மிக மிகப் பொருத்தமாக இருக் கிறது. 琴 * 類 o தலைவி அதற்குத்தான் எத்தனே சுறுசுறுப்பு! தோழி : கடமையுடையவர்கள் சுறுசுறுப்பாக இராமல் இருந்தால் எப்படிக் குடும்பத்தை நடத்தமுடியும்? தலைவி 3. குடும்பமா? - தோழி : மனிதன் மட்டுமா குடும்பம் நடத்துகிருன்? குருவிக்குக் கூடக் குடும்பம் உண்டு. . . . . தலவி ஆல்ை அதற்குக் கவலே இல்லை. நாளேக்கு வேண்டுமே என்ற கவலேயே இல்லே. அதோ முற்றத்தில் உலர்த்தியிருக்கிற தானியத்தைக் கொத்தி உண்டு வயிற்றை நிரப்பிக்கொள்கிறது. தோழி தான் நிரப்பிக்கொள்வதோடு நில்லாமல் தன் குழந்தைகளுக்கும் கொண்டு போய்க் கொடுக் கிறது.