பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 குறிஞ்சிமலர்

இரயிலேற்றி விட்டு மதுரை திரும்பினான். பூரணி, முருகானந்தம், எவருக்கும் தன் வாயால் அந்த செய்தியைத் தெரியவிடவில்லை

அவன்.

34

கரையா எனது மனக்கல்லும் கரைந்தது கலந்து கொளற்கு என் கருத்தும் விரைந்தது புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று பொய்படாக் காதல் ததும்பிமேற் பொங்கிற்று.

- இராமலிங்க அடிகள்

பூரணியையும், மங்களேசுவரி அம்மாளையும் கல்கத்தா மெயிலில் ஏற்றிவிட்டுச் சென்னைலிருந்து மதுரை திரும்பிய அரவிந்தன் வாழ்க்கையிலேயே அதுவரை உணர்ந்திருக்க முடியாத வேதனையையும், தனிமையையும் முதல் முதலாக உணர்ந்தான். மீனாட்சி அச்சகத்திலிருந்து தன்னுடைய வாழ்வு பிரியும் என்றோ, பிரிக்கப்படும் என்றோ கனவில் கூட எண்ணியிருக்கவில்லை அவன். எண்ணியிருந்தால் என்ன? எண்ணியிருக்கா விட்டால் என்ன? திடீரென்று கண்ட பயங்கரக் கனவு போல் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. மீனாட்சி சுந்தரம் உயிரோடிருந்தால் இப்படி நடந்திருக்குமா? கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மனிதர்கள் எவ்வளவுக்கு நன்றி கெட்டவர்களாகவும், நன்மை யற்றவர்களாகவும் மாறி விடுகிறார்கள் அந்த அச்சகமும் அதன் பொருள் வளமும் சிறப்படைவதற்கு இரவு பகல் பாராமல் துன்புற்று உழைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து நொந்தான் அரவிந்தன். தகப்பனுக்கு மூத்த பிள்ளை உழைப்பதை விட அதிகமாக உழைத்தானே அவருக்கு? அந்த உழைப்புக்கும் உண்மைக்கும் செலுத்தப்பட வேண்டிய நன்றியுறவெல்லாம் அவரோடு அவரைப் போலவே மாய்ந்துபோய் விட்டனவா? மறக்கப்பட்டு விட்டனவா? - .

கல்கத்தாவுக்குப் புறப்படுகிற நேரத்தில் பூரணிக்கோ மங்களேசுவரி அம்மாளுக்கோ இந்த நிகழ்ச்சி தெரிந்திருந்தால் பயணத்தைக் கூட நிறுத்தியிருப்பார்கள். அவ்வளவுக்கு வருந்தத் தக்க செய்தி இது. அது தெரிந்து அவர்கள் பயணம் தடைப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/426&oldid=556149" இலிருந்து மீள்விக்கப்பட்டது