பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கு று ங் .ெ தா ைக க்

தினை அறுவடை ஆயிற்று. ‘இனி அங்கே என்ன வேலை? வீட்டுக்கு வரச்சொல்’ என்று உத்தரவிட்டாள் தாய்.

“காவல் முடிந்தது. நாளைக்கு வீடு செல்கிருேம்’ என்றாள் தோழி. கேட்டான் அவன். இடிந்து போனன்.

போகிறீர்களா?’ என்றான். அதற்குமேல் அவனுல் பேச முடியவில்லை. மனசு எப்படியோ ஆயிற்று. துக்கம் வந்தது. பெரிய கிதி இழந்தவன் போல விம்மினன்: வெய்துயிர்த்தான்.

“ஏன்? என்ன?’ என்றாள் அவள்.

‘ஒன்றுமில்லே’ என்று பெருமூச்சு விட்டான்.

“இனிமேல் இவளை எங்கே சந்திக்க இயலும்? இந்த ஜென் மத்தில் இல்லை. இல்லாவிட்டாலும் போகிறது. அடுத்த ஜென் மத்திலாவது இவளேயே காதலியாகப் பெறுவேன். உறுதி! அஞ் சாதே நெஞ்சே!” என்றான்,

பெறுவது இயையாது ஆயினும், உறுவது ஒன்று உண்டுமன் வாழிய - நெஞ்சே! - திண் தேர்க் கை வள் ஒரி கானம் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் மை ஈர் ஒதி மாஅயோள்வயின், இன்றை அன்ன நட்பின் இந் நோய் இறு முறை என ஒன்று இன்றி, மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.

- —LIII 600Tss

79. வருவாய் அங்கே !

காளை முதல் நாங்கள் தினைப்புனங்காக்கப் போகின்றாேம்’ என்றாள் தோழி.

“அப்படியா!’ என்று கேட்டு கின் ருன் அவன். இதுவரை வீட்டுக்கு வந்து அவளுடன் இன்பமாக இருந்தான். இனி அதற்கு வழியில்லே. ஏங்கினன்.

தோழிக்கு மறுபடியும் சந்தேகம். வீட்டுக்கு வரப்போகிருனே என்று.