பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 107

‘உன்னிடம் சொல்வதற்கென்ன? எல்லாம் அந்தப் பெண் மீது கொண்ட காதல்தான்” -

“காதலா 1 அட போடா பயித்தியக்காரா வீணுக மனதை அலேய விடாதே !’

“என்ன அப்படி ஒரே போடு போடுகிறாய் ?”

‘காதல் என்பது என்ன ? சொல் பார்க்கலாம்’

“அது நோய்”

“அப்படி ஒன்றுமில்லை’

‘வருத்தும் நோய்”

  • அல்ல’’

‘பின் என்னவாம் ?’’

“அப்படிக் கேளு, அது ஒரு விருந்து அப்பா விருந்து!’

‘அதென்ன விருந்து ?’’

“அதோ பார் ! அந்த மேட்டு கிலத்திலே பசுமையான புல் வளர்ந்திருக்கிறது. அங்கே ஒரு பசு மேய்கிறது பார் ! அந்தக் கிழட்டுப் பசுவுக்கு பல்லிலே வலு உண்டா ? புல்லேக் கடிக்க முடியுமா? முடியாது. பின் என்ன செய்கிறது? நாவில்ை நக்கி நக்கி இன்பமடைகிறது. புல் தின்ற இன்பம். விருந்துண்ட இன்பம். இந்த மாதிரி இன்பம் தருவதுதான் காதல் 1’

“அப்படியானுல் நீ என்ன சொல்கிறாய் ? கினேக்க நினைக்க இன்பம் தரவேண்டும். தொட்டுப் பார்த்தால் இன்பம் அது தான் காதல் 1 என் கிருயா ?”

“ஆமாம் ! ஆமாம் !’

‘அப்படியால்ை துன்பங் தருவது ?”

“காதல் அல்ல !’

‘காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்றே : கினைப்பின், முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல் மூதா தைவகதாங்கு விருந்தே காமம் . பெருந்தோளோயே!

-மிளைப் பெருங் கந்தன்