பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கு று ந் தொ ைக க்

82. பெண்ணைப் பார்க்காதே கண்ணைக் காட்டாதே!

செல்வர் வீட்டு இளைஞன். கட்டழகி ஒருத்திமீது காதல் கொண்டான் ; கருத்து அழிந்தான் ; உளம் பறி கொடுத்தான்; அவளேயே எண்ணி எண்ணி ஏங்கினன்,

கண்டரன் அவனுடைய தோழன். க ண் டி த் தா ன். கேட்டான் அவன். என்ன சொன்னுன் ?

“ஆமாம் ஆமாம்! தெரியாத்தனமாக இதிலே சிக்கி விட் டேன். அவளது இனிய மொழியும் இன்பப் பார்வையும் என்னே வாட்டுகின்றன. வருத்துகின்றன. நீ மிகுந்த புத்திசாலி பார் ! இந்த மாதிரி பெண் எவளாவது வந்தால் அந்தப் பக்கம் கூடப் பார்க்காதே. ஒடிப் போய்விடு. தெரிந்ததா ?’ என்றான். அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி அன்ன இனியோள் குணனும், இன்ன இன்ன அரும் படர் செய்யும்.ஆயின், உடன் உறைவு அரிதே காமம் ; குறுகல் ஒம்புமின், அறிவுடையீரே !

-ஐயூர் முடவன்

83. வேழமும் வேங்கையும்

மலே நாட்டிலே உள்ள யானைகள் என்ன செய்கின்றன ? தமக்குள் சண்டையிடுகின்றன. அவ்விதம் சண்டை நிகழும் போது வேங்கை மரத்தின்மீது மோதுகின்றன. வேழம் மோதிய வேங்கை என்னுகிறது ? சிறிது சாய்கிறது. அடியோடு பெயர்ந்து விழவில்லை.

சாய்ந்த வேங்கை மரத்தின் மலர்களைப் பெண்கள் பறித்துத் தலையில் சூடிக் கொள்கிறார்கள். மரத்தின்மீது ஏருது, மண்ணில் கின்றவாறே மலர் கொய்கிறார்கள்.

இத்தகைய மலைநாட்டு இளைஞன் ஒருவன் வெளியூர் சென்றிருக்கிருன். வர நாள் பிடிக்கிறது. வருந்துகிருள் அவனது காதலி.