பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 109.

“இன்னும் வரவில்லே பார்’ என்று கோபிக்கிருள்.

“எதற்காகக் கோபிக்கிறாய் ? உன் பொருட்டுத்தானே அவன் வெளியூர் போயிருக்கிருன். அதை யறிந்து மனம் ஒன்றாக இருக்க வேண்டாமா ?” என்றாள் தோழி.

‘நீ சொல்வது சரி. அவனிடம் எனக்கு அன்புதான் ; ஆசைதான்’

“அப்புறம் என்ன ?”

“ஒன்றே ஒன்று”

என்ன ?’’

“யார் யாரோ வந்து பெண் கேட்கிறார்களே ! அதற்கு இடம் கொடுத்து விட்டாரே! இன்னும் வராதிருக்கிருரே ! அதை நினேக்கும் போதுதான் அவர்மீது கோபம் வருகிறது.”

‘ஒன்றும் பயப்படாதே ! யானையும் யானையும் சண்டையிட்டு மோதும்போது வேங்கை சரிகிறது. சிரமமின்றி மங்கையர் மலர் கொய்யவில்லையா ?”

கொய்கிறார்கள். அதற்கென்ன ?”

“அந்த மாதிரி, உற்றாரும், பெற்றாரும், மற்றையோரும் உன் பொருட்டு மண்டையை உடைத்துக் கொள்ளட்டுமே ! உன் காத லன் உன்பால் வணங்கி அன்புடன் வருவான். ஆசையுடன் வருவான். சிரமமின்றி ஒரு காரியம் செய்துவிடேன்’

‘என்ன அது ?’’

‘அவைேடு போய்விடு”

“அதைத்தான் நானும் உனக்குக் குறிப்பாகச் சொன்னேன். ஒன்றுவேன் ஒன்றுவேன் என்றேனே !! அதன் பொருள் என்ன? நானும் அவனும் ஒருமனப் பட்டுச் சதிசெய்து ஓடிவிடுவோம்.”

; ஒன்றுவென் ; குன்றத்துப்

பாருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார், கின்று கொய மலரும் நாடனெடு

ஒன்றேன் - தோழி! - ஒன்றினனே

-கபிலர்