பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 1 11

காவல் முடிந்தது. வீட்டுக்கு வந்தாள் அவள். அவனும் இரவு நேரத்திலே வரத் தலைப்பட்டான். இப்படிக் கொஞ்ச காலம் நடந்தது.

இப்படி அவன் இரவு நேரத்திலே வருவது அவளுக்கு மிக அச்சம் அளித்தது. காரணம் என்ன ? அவன் வரும் வழி அப் படிப்பட்டது, பயங்கரமானது.

‘இனிமேல் இரவு வராதே’ என்றாள் தோழி. ‘பகலிலும் பார்க்க முடியவில்லே. இரவும் வராதே என் கிறாய். நான் என்னதான் செய்வேன் ?’ என்றான்.

வேறு வழி?’

‘வழியிருக்கிறது’ “என்ன வழி?” “ஒரே வழிதான்’ என்றான், பெருமூச்சு விட்டான், அவள் அறிந்தாள்.

‘சரி. அப்படியே செய்யலாம். அதுவே அறிவுடைமை. ஆல்ை ஊரார் பழி சொல்வார்கள்’.

“பழிக்கு அஞ்சி, அறிவுடைய செயலைக் கை விடலாமா ?” ‘சரி. அவளிடம் சொல்கிறேன். சம்மதித்தால் இருவரும் இன்று இரவே ஒடிப் போங்கள். நான் வேண்டாம் என்றா சொல்வேன்’ என்றாள்.

அவனது காதலியிடம் சென்றாள். விஷயத்தைச் சொன்னுள். அப்புறம் என்ன ? அவள் முடியாது’ என்றா சொல்வாள்?

‘தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்; இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல் ; யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?’ என ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து, ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற ; ஐதேய் கம்ம யானே : கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.

-தங்கால் முடக்கொல்லஞர்