பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 133

பனைத் தலைக் - கருக்குடை நெடு மடல் குருத்தொடு மாய, கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் கணம் கொள் சிமைய உணங்கும் கானல், ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக் கூழை பெய் எக்கர்க் குழிஇய பதுக்கை புலர் பதம் கொள்ளா அளவை, அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

- விற்றுற்று மூதெயினனர்

11.1. காதலும் வாடலும்

“ஏன் இப்படி வருந்துகிறாய் உடம்பு மெலிந்து விட்டது. வ&ள நெகிழ்ந்து விட்டது. வருந்தாதே’ என்றாள் தோழி.

“நான வருந்துகிறேன் ? இல்லையே. என்னைப் பிடித்த காதல் அல்லவா வாட்டுகிறது’ என்றாள் அவள்.

கைவளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும், மை படு சிலம்பின் ஐவனம் வித்தி அருவியின் விளேக்கும் நாடனெடு, மருவேன் - தோழி! - அது காமமோ பெரிதே.

-உறையூர் முதுகூத்தன்

112. நீலமும் நினைப்பும்

“என்னடி இது, ஏன் இவள் இன்னமும் வருந்துகிருள்? கண்ணிர் சொரிகிருள். முருகனுக்குப் பூசை போட்டாகி விட் டதே ‘ என்றாள் தாய்.

‘எல்லாம் முன் பிறவித் தொடர்பு’’ என்றாள் தோழி.

“ஏன் அந்த நீலப் பூவைப் பார்த்துப் பார்த்துக் கண்ணிர் சொரிகிருள் ?”