பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கு று ங் தொ ைக க்

“அதுவா? அவளுக்கு ஒரு நண்பன் இருக்கிருன். ஊழ் வினை கூட்டுவித்த நண்பன். அவன் நீலப்பூ கொடுத்தான் அவ: ளுக்கு. நீலத்தைப் பார்க்கும் போது அவன் நினைவு வருகிறது அவளுக்கு. அழுகிருள்”

  • அப்படியா சங்கதி?’

பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின் சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ? - வேறு யான் கூறவும் அமையாள், அதன்தலைப் பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு, ஒழுகு கண்ணள் ஆகி, பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே,

-பேரிசாத்தன்

113. அபாய அறிவிப்பு | “சென்று வருவேன்’ என்றான் அவன். *நீ வரும் வரை உன் காதலி எப்படி ஆற்றியிருப்பாள் ?” என்றாள் தோழி.

‘இருக்க மாட்டாளோ ?’ என்றான். ‘உன்னையே எண்ணி எண்ணி ஏங்குவாள். தோள் மெலிந்து வ&ளகள் கழன்று, கண்கள் ஒளியிழந்து துன்புறுவாள்’ என்றாள் தோழி.

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் பாடு இல கலிழ்ந்து பணி ஆனவே . துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் மருங்கில் கொண்ட பலவின் பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.

-மதுரை கல்வெள்ளி