பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கு று க் .ெ த ைக க்

“விரைவில் வா’ என்றாள். சென்றான் அவன். அவள் என்ன செய்தாள். அவனேயே எண்ணி இருந்தாள். அவனுடைய மலையிலே மழை பெய்தது மாலையிலே. அந்த மழை நீர் அருவியாகி ஒடையாகி ஓடி வந்தது காலேயிலே. வரும் போது காந்தள் கிழங்குகளேயும் அடித்து வந்தது.

அந்த காந்தள் கிழங்கு ஒன்றைக் கொண்டு வந்தாள் அவள். முற்றத்து மண்ணிலே நட்டாள். தண்ணிர் ஊற்றிள்ை. வளர்த் தாள். காந்தள் செடியாயிற்று. மலர்ந்தது.

அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள் அவள். காதல னேக் காண்பது போல ஆனந்தம் கொண்டாள்.

காதலன் வ ந் து வி ட் டான். கலியாண முயற்சிகள் நடக்கின்றன.

‘பேஷ் கெட்டிக்காரி t ! காதலனைப் பிரிந்த வாட்டத்தைச் சிறிதும் வெளிக்காட்டவில்லேயே t’ என்று பாராட்டினுள் அவ ளது தோழி.

‘போடி பயித்தியம் ! அம்மாவைப் பாராட்டு. அவள் வாழ்க ?’ என்றாள் அவள்.

“ஏன்’ என்றாள் தோழி. ‘'காந்தள் செடியை ஏன் வளர்க்கிறாய் என்று கோபித்துப் பிடுங்கிப் போடாதிருந்தாளே!’ என்றாள்.

அம்ம வாழி, தோழி - அன்னேக்கு உயர்நிலை உலகமும் சிறிதால் - அவர் மலே மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு காலே வந்த முழுமுதற் காந்தள் மெல் இலே குழைய முயங்கலும்,

இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.

-கபிலர்

116. தா யு ம் ேப யு ம்

“இனி மேல் இரவு நேரத்திலே வர வேண்டாம் என்று சொல்லு’ என்றாள் அவள்.