பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 189

வேங்கை கமழும் எம் சிறுகுடி யாங்கு அறிந்தனையோ ? கோகோ யானே.

-கபிலர்

119. @&ru vu

“இரவு நேரத்தில் வருகிறேனே” என்றான் அவன்.

‘அது அவ்வளவு சுலபமல்ல’ என்றாள் அவள்.

“ஏன்?’ என்றான்.

இரவிலே தாய் அணைத்துக் கட்டிக்கொண்டு படுத்திருப் பாள். அதிலிருந்து வெளியேறி வருவது கஷ்டம். நீ வந்து கிற்பாய். துளக்கமும் கொள்ளாது, வெளியே வரவும் இயலாது துன்புற நேரும். பகல் நேரத்திலே அருவியிலே, உனது மார்பே தெப்பமாகக் கொண்டு நீந்தி விளையாடி இன்புறுவதே நல்லது’ என்றாள் தோழி.

ஆர் கலி வெற்பன் மார்பு புணே ஆக, கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; நிரை இதழ் பொருந்தாக் கண்ணுேடு, இரவில், பஞ்சி வெண் திரிச் செஞ் சுடர் நல் இல் பின்னு வீழ் சிறு புறம்தழிஇ, அன்னே முயங்கத் துயில் இன்னதே.

-உறையூர் முதுகூத்தன்

120. தையலும் மையலும்

அவள்மீது காதல் கொண்டான் அவன். அவளும் அவனைக் காதலிக்கிருள். அவளே விட்டுப் பிரிய மனம் வரவில்லே அவனுக்கு. நாள் முழுதும் அவளுடனே இருக்கிருன். சுனே யிலே மலர்ந்த மலர்களைத் தொடுத்து அவளது தலையிலே சூட்டு கிருன். தினைப்புனம் காக்கிருன். கிளிகளை ஒட்டுகிருன். மாலை நேரம் வந்துவிட்டது. ஏதோ ஒன்றைக் கேட்க விரும்பு