பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கு று ங் .ெ த ைக க்

146. வஞ்சினமும் வாலிபமும்

அவளும் காதலித்தாள். அவனும் காதலித்தான். இருவரும் இன்பமாகப் பொழுது போக்கினர். அவன் வருவான் பகல் நேரத்திலே, பஞ்சாய்க் கோரையைப் பிடுங்குவான். பாவை செய் வான். அவளுக்குப் பரிசளிப்பான். அவளும் அதை ஏற்று மகிழ் வாள் ; விளையாடுவாள்.

அவளது தோளைத் தொட்டுத் தொய்யில் எழுதுவான் அவன். அவளும் அதைப் பார்த்து ஆனந்தம் அடைவாள். இது எவருக்கும் தெரியாது. இரகசியம். தோழிக்குக் கூடத் தெரி யாது. இவ்வளவும் தினைப்புனத்திலே நடந்தது.

காவல் முடிந்தது. வீட்டுக்குப் புறப்படுகிருள் அவள். வீட் டிலே அவளே ச் சந்திப்பது எப்படி? தோழியின் தயவு இல்லாமல் முடியாது. எனவே தோழியிடம் போனன் அவன். தனது காதல் உள்ளத்தைத் திறந்து காட்டினன். ஒரு முறையல்ல ; பல முறை. ஆனல் தோழியோ சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. போடா போ!’ என்று கூறிவிட்டாள்.

கோபம் கொண்டான் அவன்.

‘சரி சரி. இப்படியா சொல்கிருள் ? இருக்கட்டும். நான் மட லேறி வருகிறேன். ஊராரிடம் உண்மையைச் சொல்கிறேன். இவ ளுக்கு நான் பாவை பண்ணிக் கொடுத்ததையும், தோள் தொட்டு தொய்யல் எழுதியதையும் பகிரங்கமாகச் சொல்கிறேன். அப் போது இந்தத் தோழி என்ன செய்வாள் ? என்னே எப்படித் தடுப்பாள்? அதையும் பார்த்து விடுகிறேன்’ என்று வஞ்சினம் கூறினன் ; போனன். --

பணைத் தோட் குறுமகள் பாவை தைஇயும், பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று - இவள் உருத்து எழு வன முலே ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,