பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 169

வில் கண்டேன்’ “பெற்றாேருக்குத் தெரியாதுபோல் இருக்கு. பயல் அவளேக் கொண்டு செல்கிருன்’

‘ஐயோ பாவம் ! போகட்டும். சிறு வயசு. நன்றாக வாழட்டும்’ என்று வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியை அழகாகச் சொல்கிறார் கவி.

வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே ! நல்லோர் யார் கொல் அளியர் தாமே! ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெள் நெற்று ஒலிக்கும் வேய் பயில் அழுவம் முன்னியோரே.

-பெரும்பதுமனர்

150. கனவும் காதலனும்

‘என்னடி ஒரு மாதிரியாக இருக்கிறாய் ?”

“எப்படி இருக்கிறேன் ?’’

‘கண் எப்படியோ இருக்கே ?’

“ராத்திரி தூக்கமில்லை’

‘ஏன் தூங்கவில்லை ?”

கனவு கண்டேன்’

‘அப்படிச் சொல்லு! என்ன கனவு ?’’

“சொல்லவா, போடி, வெட்கமா இருக்கு!’

“என்னடி வெட்கம் ! சும்மாச் சொல்லு’’

  • ராத்திரி தூக்கத்திலே...’
உம். தூக்கத்திலே என்ன?...’

“ஆகா ! இன்பக் கனவு இன்பக் கனவு!”

‘சரிதானடி, அந்த இன்பத்தை நீயே நினைத்து கினைத்துக் கொண்டிருந்தால் எப்படி ? எனக்கும்தான் கொஞ்சம் சொல்லேன்’

“இரவு, வந்தாரடி’