பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 குறுங் .ெ த ா ைக க்

கல கல என்று கண்ணிர் உகுத்தாள் அவள். கண்டான். கலங்கினன்.

நான் திரும்பி வரும்வரை நீ ஆற்றியிருக்கமாட்டாய். நானே வழியிலே மான் தன் பிணையோடு இருப்பது கண்டு மனம் நெகிழ்வேன். மேற்செல்ல மாட்டேன். திரும்பி வந்துவிடு வேன். எனவே, நான் போகவில்லை. நீ வருந்தாதே’ என்றான்.

‘மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, மான் ஏறு உகளும் கானம் பிற்பட, வினே கலம் படிஇ, வருதும்; அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய் ?’ எனச் சொல்லாமுன்னர், நில்லா ஆகி, நீர் விலங்கு அழுதல் ஆன, தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.

205. நல்ல சகுனமடி தோழி!

‘வருந்தாதே. எழுந்திரு. நல்ல சகுனங்களைப் பார். கூதிர் காலம் வந்துவிட்டது. நாரைகள் திரிகின்றன. வண்டுகள் ஊது கின்றன. அரும்புகள் மலர்கின்றன. நெகிழ்ந்த உன து தோளும் சிறிது நெகிழ்ச்சி நீங்குகிறது. எனவே, உன் காதலர் வருவது உறுதி” என்றாள் தோழி.

குருகும் இரு விசும்பு இவரும் ; புதலும் வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும் ; வருவர்கொல் வாழி - தோழி ! - பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, கன்று இல் ஓர் ஆ. விலங்கிய புன் தாள் ஒமைய சுரன் இறந்தோரே.

-கல்லாடனர்