பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கு று ங் தொ ைக க்

விட்டார்: அடடா இந்த மரத்தின்கீழ் எத்தனை இரவுகள் வந்து எனக்காகக் காத்திருந்தார். எவ்வளவு பேச்சுப் பேசினுேம். எல்லாவற்றையும் மறந்துவிட்டாரே !’ என்று புலம்பிள்ை அவள்.

நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று இன்ன இரவின் இன் துணை ஆகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர்கொல்லோமறப்பு அரும் பணத் தோள் மரீ இத் துறத்தல் வல்லியோர் புள்வாய்த் துளதே ? . க்கீரர் 5

208. கா த லும் க ரு ம் பும்

பொருள் தேடவேண்டும் என்ற ஆசை தோன்றியது அவ னுக்கு. அதே சமயத்தில் மற்றாேர் எண்ணமும் தோன்றியது. இளம் காதலியை எப்படிப் பிரிவது என்ற எண்ணம். இளமை என்றும் கிலேத்திருப்பதா ? இல்லையே. ஆகவே இளமை இருக்கும்போதே இன்பம் துய்ப்பதுதானே நல்லது. இன்று இருப்பவர் நாளே இருப்பது என்ன உறுதி கரும்பின் அடிக் கட்டைபோல் சுவை தரும் இந்த இளம் காதலியின் இன்பத்தை இப்பொழுது நுகராமல் பின் எப்பொழுது நுகர்வது ?

இவ்வாறு தனக்குத்தானே எண்ணினன். “சீச்சி பெரு நிதி பெறினும் இவளைப் பிரியேன்” என்று கூறினன்.

இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் ஒருங்குடன் இயைவது.ஆயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் கோல் அமை குறுங் தொடிக் குறுமகள் ஒழிய, ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும் உறல் முறை மரபின் கூற்றத்து அறன் இல் கோள் கற்கு அறிந்திசினேரே.

-காலெறி கடிகையார்