பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 22 f

“அவர் போன இடத்திலும் இப்படித்தானே இருக்கும்?” என்று கேட்டாள் அவள்.

“இப்படியே தான் இருக்கும்.’’ என்றாள் தோழி.

‘அவர் பார்த்தாரோ பார்க்கவில்லையோ?

‘பார்த்தால் கார் பருவம் வந்து விட்டது. என்பதை அறிந்து கொள்ளமாட்டாரா ? உனது தோள்வளே கழன்று ஒடும் என்தை யும் அறியாரா? அறிவார். எனவே விரைவில் வருவார்” என்றாள்.

செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த கவ்வை நாற்றின் கார் இருள் ஒர் இலே நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும் கார் எதிர் தண் புனம் காணின், கைவளே, நீர் திகழ் சிலம்பின் ஒராங்கு விரிந்த வெண் கூதாளத்து அம் துாம்பு புது மலர் ஆர் கழல்பு உகுவ போல, சோர்குவஅல்ல என்பர்கொல் - நமரே?

-நாகம் போத்தன்

215. பருந்தும் பாலையும்

“பொருள் தேடப் போகிறேன்” என்றான் அவன். ‘போதிய பொருள் தான் இருக்கிறதே. இன்னும் தேட வேண்டுமா?’ என்று கேட்டாள் அவள்.

‘அட, அசடே. இது என் முன்னேர் தேடிய பொருள் அல்லவா ? இதை வைத்து வாழ்தல் எனக்குப் பெருமை தராது. அது இரந்து வாழ்தலினும் மிகத் தாழ்ந்தது” என்றான். புறப் பட்டான். அவன் சென்ற வழியையே பார்த்து ஏங்கிள்ை அவள்.

‘ஏன் இப்படி வருந்துகிறாய்?’ என்று கேட்டாள் தோழி. ‘அவர் பிரிந்தது பற்றி நான் வருந்த வில்லையே!” ‘பின் எது பற்றியோ ?” “அந்தப் பாலே நிலம். கொல்லுக் கொலைக்கு அஞ்சாதவர்