பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 223

வார் என்று எண்ணுகிறேன். இப்படி இரவும் பகலும் போய்க் கொண்டே யிருக்கின்றன. அவரோ வரக்காணேன். எங்கே தான் இருக்கிருரோ தெரியவில்லையே!”

வைகா வைகல் வைகவும் வாரார்; எல்லா எல்லே எல்லவும் தோன்றார்; யாண்டு உளர்கொல்லோ? - தோழி! - ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே: பல் ஊழ் புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு இமைக்கண் ஏது ஆகின்றாே! - ஞெமைத் தலை ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும் வான் உயர் பிறங்கல் மலே இறந்தோரே.

-பூதத் தேவன்

217. 10. au

பாலே நிலத்திலே பெண் யானே வருந்தும். குடிப்பதற்கு நீர் கிடைக்காமல், ஆண் யானே என்ன செய்யும் மரப்பட்டையைத் தனது கொம்பினல் குத்தும். ஈரமே இராது அந்தப் பட்டையில். “ஐயோ நமது காதலியின் வருத்தம் போக்க முடியவில்லையே’

என்று வருந்தும். துதிக்கையைத் தூக்கி ஒலமிடும்.

  • இதைக் கண்டும் கூட அவருக்கு என் கினேவு தோன்ற

வில்லையே. வரவில்லையே. மறந்து போனுரோ ?

செவ்வானத்திலே பிறையும் தோன்றி விட்டது. எனது துன்பத்தை அதிகரிக்க. கன்னிமார் பலரும் தொழுகின்றனர். நான் என்ன செய்வேன் ?”

வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ, செய் வாய் வானத்து ஐயெனத் தோன்றி, இன்னப் பிறந்தன்று, பிறையே; அன்னே, மறந்தனர்கொல்லோ தாமே - களிறு தன் உயங்குகடை மடப்பிடி வருத்தம் கோனது, கிலே உயர் யாஅம் தொலையக் குத்தி, வெண் நார் கொண்டு, கை சுவைத்து அண்ணுந்து,