பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 335

235. எனக்கொரு வாசகம் சொல்வாரில்லையே’

‘வருந்தாதே எழுந்திரு. இது உலக இயற்கை. தலைவர் பிரிவதும் பிரிந்து வந்து சேர்வதும்; அவர் வரும்வரை தேறியிரு’ என்றாள் தோழி.

“ஆமாம்! ஆற்றியிரு; ஆற்றியிரு என்று எனக்கு ஆறுதல் சொல்கிறார்களே தவிர, வந்து விட்டார் என்று சொல்வார் இல்லையே!” என்று மீண்டும் வருந்திள்ை அவள்.

தேற்றாம் அன்றே - தோழி தண்ணெனத் துாற்றும் திவலைத் துயர் கூர் காலை, கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் கையிறை ஆக நெய் பெய்து மர்ட்டிய சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலே, அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, மெய்ம் மலி உவகையின் எழுதரு கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

336. அவர்க்கு நினைவில்லையோ !”

“அவர் வரவில்லையே!” என்றாள் அவள்.

‘வந்து விடுவார். வருந்தாதே’ என்றாள் தோழி.

“அவர் சென்ற வழியிலே யா மரங்கள் நிறைய இருக்கு மல்லவா ?”

“ஆமாம், இருக்கும்’

‘அந்த யா மரத்தின் தழைகளே ஒடித்து யானே உண்ணு மல்லவா ?”

“ஆமாம்”

‘அந்த நிழலில் மான் துரங்கும் அல்லவா ?”

    • ஆம்’

‘அது கண்டுமா அவருக்கு எனது கினைவு வரவில்லை ?”