பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கு று ங் தொ ைக க்

மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை . கல் பிறங்கு அத்தம் சென்றாேர் கூறிய பருவம் வாராஅளவை, நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, வம்ப மாரியைக் கார் என மதித்தே.

-கோவர்த்தனர்

241. கா ரும் கலை யு ம்

‘போய் வருகிறேன்” என்றான் அவன்.

ஆகா! விரைவில் வந்துவிடு’ என்றாள்.

‘கார் தொடங்கும் காலத்தே வருவேன்’ என்றான்.

‘மறவாதே’ என்றாள்.

‘மாட்டேன்’ என்றான்.

நாட்கள் சென்றன. இன்று நாளே என்று ஒவ்வொரு நாளே யும் எண்ணிக் கொண்டிருந்தாள் அவள். கார் காலமும் வந்தது. வருவான் வருவான்’ என்று வழிமேல் விழிவைத்த வண்ணம் இருந்தாள்.

தூரத்திலே அருவி ஒன்று. சல சல’ என்று ஒடிக்கொண் டிருந்தது நீர். கூழாங்கற்களின் இடையே ஒடிய நீரைத் தன் காத லிக்கும் ஊட்டித் தானும் உண்டு களித்தது கலைமான். துள்ளி விளையாடியது. அதைக் கண்டாள் அவள். கண்ணிர் வடித்தாள்.

“ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டாள் தோழி,

“அதோ பார்!’ என்றாள்.

என்ன ?”

“மான் விளையாடுவது பார்’

ஆமாம். அதற்கென்ன? நீயும் அந்த மாதிரித் துள்ளி விளையாடேன்’

“அவர் வரவில்லையே!”

“வருவார்; வருவார்’

  • ert Gur?”
இக்கிரம்’