பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கு று ங் .ெ த ைக க்

வல் வில் இளேயர் பக்கம் போற்ற,

ஈற் மணற் காட்டாறு வரூஉம்

தேர் மணிகொல் ? - ஆண்டு இயம்பிய உளவே.

-ஒக்கூர் மாசாத்தி

256, இடித்து முழங்கு! மேகமே!

‘மாரிக் காலத்தே வருவேன்’ என்று சொல்லிப் போனுன் சொன்னபடி வந்துவிட்டான். காதலியுடன் இன்பமாயிருக்கிருன். அப்போது மழை பெய்கிறது. மழையைப் பார்த்து சொல்கிருன்:

‘கன்றாக இடித்து முழங்கு; மின்னி ஒளி வீசு; குளிர் துளி பொழிவாய் 1 மழையே! வாழி’

தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென வீழ் உறை இனிய சிதறி, ஊழின் தடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் பெய்க, இனி, வாழியோ, பெரு வான் . யாமே, செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு இவளின் மேவினம் ஆகி, குவளைக் குறுங் தாள் நாள்மலர் காறும் கறு மென் கூந்தல் மெல் அணையேமே.

-பாண்டியன் பன்டுை தந்தான்

257. பாத்திரத்தைக் காலி செய்கிறது

கார்காலம் வந்தது. கண்டாள் அவள்: காதலன் வர வில்லையே என்று வருந்தினள்.

‘இது கார்காலம் அன்று. வருந்தாதே’ என்றாள் தோழி.

“என்னடி சொல்கிறாய்? மழை பெய்கிறது. மயில் ஆடு கிறது. பிடவம் மலர்கிறது. இது கார்காலம் அல்லவா ?” என்றாள் அவள்.