பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 குறுங் தொ ைக க்

266. அவைகூவின்; அவள் சீறிள்ை

இரவு நேரம். பறவைகள் ஆணும் பெண்ணுமாக இருக்கின் றன. இன்பமாக இ ரு க் கி ன் ற ன. அந்த மகிழ்ச்சியால் கூவுகின்றன.

காதலனைப் பிரிந்த காதலிக்கு எப்படியிருக்கும்? துன்பமா யிருக்கிறது. காதலனே நினைக்கிருள். கோபம் வருகிறது. நம்மை இப்படி வருந்த விட்டானே என்று.

“இங்கே வரட்டும். தலையைத் தொட்டுப் பிறகு உடம்பைத் தொடுவான். போதும் போதும் ஒன்றும் வேண்டாம், விடு’ என்று சொல்கிறேன இல்லையா பார் 1’ என்று சிறுகிருள்.

உதுக்காண் அதுவே . இது என மொழிகோ? . நோன் சினே இருந்த இருங் தோட்டுப் புள்ளினம் தாம் புணர்ந்தமையின், பிரிங்தோர் உள்ளத் தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய ஏதிலாளர் இவண் வரின், போதின் பொம்மல் ஒதியும் புனேயல் ; எம்மும் தொடாஅல் என்குவெம்மன்னே.

367. பசுவும் பாக்கியமும்

தொழுவத்திலே ஏராளமான பசுக்கள் கட்டப்பட்டிருக்கின் றன. அவற்றின் மத்தியிலே ஒரே ஒரு காளே. அதன் கழுத்திலே ஒரு மணி. இரவு நேரத்தில் அந்த மணி ஓசை கேட்கிறது. மணி ஒசை கேட்டதும் தூங்காதிருந்த அவள் என்ன நினைக்கிருள்? காதலன் வந்துவிட்டதாக கினைக்கிருள். எட்டிப் பார்க்கிருள். தலைவனேக் காணுேம். வருந்துகிருள்.

அப்போதுதான், மணி ஓசை எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிருள். தொழுவத்திலிருந்து வருகிறது.