பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 26 J

‘நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டாள் செவிலி. போனுள். பார்த்தாள். ஒரு நாள் இருந்தாள். திரும்பி வந்தாள். வந்தவளைக் கேட்கிருள் தாய்.

‘ஏண்டி பார்த்தியா ?” -

‘பார்த்தேன்’

“எப்படி யிருக்கிருள் ?”

‘சந்தோஷமாகத்தான் இருக்கிருள்’

‘புருஷனுக்குச் சமையல் செய்து போடுகிருளா ?”

“ஒ. போடுகிருள்”

‘ஏனடி, அவளுக்கு என்னடி சமையல் தெரியும்? சிறிசு’

“அதென்னவோ அம்மா, சிறிசோ பெரிசோ. அவள் சமைத்துப் போடுகிருள். அவன் ஆசையோடு சாப்பிடுகிருன். கன்றாயிருக்கு என்கிருன்’

“ஏனடி அடுப்பு மூட்டவே தெரியாதே அவளுக்கு”

‘ஊதி ஊதி எரிய விடுகிருள். புகை தாங்க முடியவில்லை. கண் இரண்டும் கலங்கியிருக்கின்றன’’

‘உம். அப்புறம்’

‘குழம்பு வைத்தாள்.......”

“எப்படி யிருந்தது ?”

“ஒரே புளிப்பு’

‘உம். அப்புறம்’

‘தயிர் ஊற்றிச் சோறு பிசைந்தாள்; அந்தக் கையை அப் படியே துணியில் துடைத்துக் கொண்டாள்’

, ஏனடி, சீலேயைத் துவைத்துக் கட்டுகிருளா ?”

‘அதுதானே இல்லே. ஒரே அழுக்கு’

“ஏனடி, அழுக்குச் சீலே, புளித்த குழம்பு, கவித்த கண் இப் டிச் சோறு போ ட் டா ல் ஓர் ஆண்பிள்ளை எப்படியடி சாப்பிடுவான் ?”

“சாப்பிடுகிருனே! நன்றாயிருக்கு நன்றாயிருக்கு என்றுச் சொல்லிச் சாப்பிடுகிருன். அவளும் மகிழ்ந்து போகிருளே !’ முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,

கழுவுறு கலிங்கம், கழா அது, உடீஇ, குவளே உண்கண் குய்ப்புகை கழுமத்