பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட் சி க ள் 263

விதை கொண்டு சென்ற பனே ஒலே வட்டியிலே என்ன கொண்டு வருகிறார்கள் ? முல்லை கொண்டு வருகிறார்கள்.

கண்டாள் அவள். ‘கார் வந்துவிட்டது. முல்லேயும் வந்துவிட்டது. ஆனல் தேர் ஏறிச் சென்ற என் காதலர் மாத்திரம் வரவில்லையே!” என்று கூறினுள் வருந்தினள்.

“உழவர்கள் பயிர் செய்யத் தொடங்கிவிட்டார்களே. வாழ்க் கைப் பயிர் செய்யத் தொடங்கவேண்டிய காதலர் இன்னும் வர வில்லேயே 1’ என்று ஏங்கிள்ை. முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர் விதைக் குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான் வந்தன்துற; ‘மெழுகு ஆன்று ஊது உலேப் பெய்த பகுவாய்த் தெண் மணி மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு, மாலே கனி விருந்து அயர்மார் தேர் வரும் என்னும் உரை வாராதே.

-உரோடகத்துக் கந்தரத்தன்

274. க ன .ே வ |ா? நி னை ேவ |ா ?

‘கார் காலம் வந்துவிட்டது,” என்றாள் அவள். கண் கலங்கிள்ை. ஏன் ? காதலன் வரவில்லை. கண்டாள் தோழி.

‘இது கார் காலம் அல்ல. கார் காலமாக இருந்தால் அவர் வந்திருப்பாரே பொய்யா சொல்லுவார் ? சொல்லமாட்டாரே’ என்றாள் தோழி.

‘இல்லையடி இல்லை. இது கார் காலம்தான். தெரியாமல் சொல்கிறாய் நீ. கனவு காண்கிருயோ என்னவோ? அதோ பார். கொன்றை பூத்துவிட்டது; சிறு குழந்தைகளின் இடுப்பிலே கட்டிய பொன் காசுபோல,” என்றாள் அவள். செல்வச் சிருஅர் சீறடிப் பொலிந்த தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றை