பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 265

பிறகு அவர் வந்தால் என்ன? வராவிட்டால்தான் என்ன ? இரண்டும் ஒன்றே” என்றாள் அவள்.

வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு யார் ஆகியரோ - தோழி! - நீர லேப் பைம் போது உளரி, புதல பீலி ஒண் பொறிக் கருவிளே ஆட்டி, நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று இன்னது எறிதரும் வாடையொடு என் ஆயினள்கொல் என்னதோரே ?

-கிள்ளிமங்கலங் கிழார்

377. கார் வந்தது.காதலன் வரவில்லை

கார் காலம். முல்லை நிலம். செம்மண் பூமி. மாலேயிலே முல்லே மலர்கிறது. அதைப் பார்க்கிருள் அவள். ஆகாயத்தையும் அண்ணுந்து பார்க்கிருள். வானமும் சிவந்திருக்கிறது. நட்சத் திரங்களும் காட்சியளிக்கின்றன. இவற்றைப் பார்த்துக் கொண்டே யிருக்கிருள்.

“அம்மா !” என்று அலறுகிறது கன்று. பகல் முழுதும் புல் மேய்ந்த பசு வெகு வேகமாக ஓடிவருகிறது. கன்றை நினைத்து.

இதைப் பார்த்தாள் அவள். ‘கார் காலம். கன்று தேடி வருகிறது. பசு, ஆல்ை என்னைத் தேடி வரவில்லேயே அவர்’ என்று ஏங்குகிருள்.

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் கறவை கன்றுவயின் படர, புறவில் பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் செவ் வான் செவ்வி கொண்டன்று ; உய்யேன் போல்வல் - தோழி 1 - யானே.

-வாயிலான் தேவன்