பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 29

1. மங்கையும் மலரும்

!

“ ஆகா! உனது கூந்தலின் அழகை என்ன என்று சொல் வேன்! அதன் மணத்தைத்தான் என்ன என்பேன் 1 ஏ ! வண்டே நீயே சொல். உண்மையைச் சொல். எனக்காகச் சொல்லாதே. மலர்கள் தோறும் சென்று சென்று ஆராயும் தன்மை உனக்கு உண்டே! அதனல், கேட்கிறேன். சொல்; எனது காதலி இருக்கிருளே ! மயில் போன்ற சாயலாள் முல்லை முறுவல் அழகி ! இவளது கூந்தல்போல நறுமணங் கமழும் மலர் ஏதே னும் உண்டோ ? சொல்லு.’ கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ ? நீ அறியும் பூவே.

-இறையஞர்

2. காதலும் காந்தளும் |

‘என்ன இது

தெரிய வில்லையா?”

“தெரிகிறது; செங்காந்தள் பூ”

‘இது எதற்கு ?”

“இளைஞன் ஒருவன் மலர் கொண்டுவந்து ஒரு மங்கையிடம் கொடுத்தால் அதன் பொருள் என்ன வாம் !’

“ஒகோ ! அப்படிச் சொல்லு. நீ எங்கள் தலைவியின் மீது காதல் கொண்டு விட்டாய். எனவே, அவளிடம் இம்மலரைக் கொடுக்கச் சொல்கிருயா ?”

ஆம் p -

“இதோ பார் ! எங்களுடைய தெய்வம் யார் தெரியுமா? முருகன். அவனுடைய மலே இது. அவன் எப்பேர்ப்பட்டவன் தெரி யுமா ? சூரபத்மன் முதலிய அரக்கர்களைக் கொன்று குவித்தவன் ;