பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 3.13

னர். இரவு நேரத்திலே செவிலித்தாய் அவள் அருகே படுக்கத் தொடங்கிள்ை. நீண்ட நேரம் வரையில் செவிலித்தாய் தூங்க மாட்டாள். சத்தம் கேட்டால் விழித்துக் கொள்வாள். நாய் குரைத்தால் விழித்துக் கொள்வாள். ஆங்தை கூவில்ை விழித்துக் கொள்வாள். இது பெரிய உபத்திரவமாக இருந்தது அவளுக்கு. காதலனேச் சந்தித்து இன்பமாயிருக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. அப்படி ஏதாவது வாய்ப்பு ஏற்படுமானல் அவன் வரமுடியாது கின்று விடுவான். ஊர் காவலர் வருவர். நிலவு வரும். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் அவன் வர முடியுமா ?

என்ன செய்வாள் ! பாவம் 1 வருந்தினள். மகன்றில் என் பது ஒரு பறவை. நீரில் வாழும் அது எப்போதும் இணை பிரியாது இருக்கும். நீரிலே நீந்தும். அப்படி வரும்போது ஒரு மலர் இரண் டையும் பிரிக்கிறது. கொஞ்ச நேரம்தான். இருந்தாலும், பல வரு ஷங்கள் போல் தோன்றும் அப் பறவைக்கு. அந்த மாதிரி தோன்றி யது அவளுக்கு. அவனேப் பார்க்காதது பொறுக்க முடியவில்லே.

‘அடியே! இந்தத் தனிமை பொறுக்க முடியவில்லையே! உயிர் போவதாயினும் சரி. நானும் என் காதலனும் ஒன்றாக இணைந்து இருந்தால் போதுமே!’ என்கிருள். பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, இருவேம் ஆகிய உலகத்து, ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

-சிறைக்குடி ஆந்தையார்

333. உய்தலும் நெய்தலும்

அவன் வந்திருக்கிருன். வேலி ஒரமாக கிற்கிருன். அவ னிடம் ஒரு சேதி சொல்லவேண்டும். அது என்ன என்பது மற்ற வருக்குத் தெரியக்கூடாது. ரகசியமாகப் பேசவும் முடியாது. என்ன சேதி அது ? அவனுடைய காதலி பற்றியது. தோழி சொல்கிருள் :