பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 குறுங் தொ ைக க்

“இதோ பார். தேர்ச் சக்கரம் பதிந்த சுவடு ‘நெய்தல் மலர் கள் நசுங்கியிருக்கின்றன. இரவு உன் காதலன் வந்தான்” என்றாள் தோழி. பூண் வளைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து, இவண் - தேரோன் போகிய கானலானே.

-ஓத ஞானி

373. சேர்ப்பனுடன் சேர்வதன்முன்

“தாமரைக் கண்கள் ! வேய் போன்ற தோள் பிறை நுதல் ! என்று சொல்லும்படியாக அவ்வளவு அழகுடனிருந்தேன் நான். அது ஒரு காலம். அது எப்போ ? நாரைபோல் தாழை மலரும் சேர்ப்பனுடன் சேருவதன்முன். அந் நிலை இப்போது இல்லை. என் அழகு என்னிடமில்லை’ என்றாள் அவள்.

பூவொடு புரையும் கண்ணும், வேய் என விறல் வனப்பு எய்திய தோளும், பிறை என மதி மயக்குறுTஉம் நுதலும், நன்றும் நல்லமன் ; வாழி - தோழி ! - அல்கலும் தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் குருகு என மலரும் பெருங் துறை விரிநீர்ச் சேர்ப்பனெடு ககாஅ ஊங்கே.

-மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதன்

374. க | வ லு ம் கா த லு ம்

காதலன் ஒருவன். அவளேப் பிரியாமல் சுற்றிக்கொண்டே யிருந்தான். கண்டுவிட்டாள் தாய். கண்டிக்கத் தொடங்கிள்ை மகளே. வீட்டிலே அடைத்து வைத்தாள். வீட்டுப் பக்கத்திலே யும் வந்து நின்றான் அவன். அப்போது சொல்கிருள் அவள்: