பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கு று ங் தொ ைக க்

விட்ட குதிரை விசைப்பின் அன்ன, விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் வேனில் ஆனேறு போலச் சாயினன் என்ப நம் ம்ாண் நலம் நயந்தே.

-விட்ட குதிரையார்

9. மங்கையும் மோகமும்

“என்னப்பா ஒரு மாதிரியாக இருக்கிறாய் ?” ‘ஒன்று மில்லை. அந்தப்புறம் போய் வந்தேன்.” “அந்தப்புறமா...? எந்தப்புறம் ?” ‘மலைப்புறம்’ மேலைப்புறத்திலே என்ன கண்டாய் ?” ‘அம்பு பாயக் கண்டேன்’ :யார் மீது ?” “என் மீது தான் !’ :அம்பா ?” “ஆம். பார்வைக்கு மலர் போல் சுழல்கிறது. ஆனல் அம்பு போல் தைக்கிறது; வதைக்கிறது’ ‘என்ன, புதிர் போடுகிறாய் ?” “உண்மைதான்’ “ஆமாம் எது உண்மை ?” “அந்தப் பெண் என் மீது கண் வீசினுள்.” எந்தப் பெண் ?” ‘குருவி யோட்டிய பெண் !’ ‘எங்கே குருவி யோட்டினுள் ?” “பருத்தியும், தினையும் கலந்து விளைந்திருக்கும் தி னை ப் புனத்திலே 1”,

“அப்படிச் சொல்லு! அந்தப் பெண் மீது மோகம் கொண்டு தவிக்கிறாய் !’

  • ஆம்’