பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள்

ஆலங்குடி வங்களுர்

ஆலங்குடி என்ற ஊரைச் சேர்ந்த புலவர் இவர் எந்த ஆலங்குடி என்பது தெரியவில்லை.

ஆலத்துர் கிழார்

கிழார் என்பது வேளாளர் தம் பட்டப் பெயர். ஆலத் தூரைச் சேர்ந்த வேளாளர் இவர் என்பது தெரிகிறது. ஆலத்துார் எது என்பதுதான் தெரியவில்லே.

இளங் கீரந்தையார்

கீரன் தந்தையார் என்பது கீரந்தையார் என்றாயிற்று. வயதில் இளையவராயிருந்ததால் இளம் கீரந்தையார் என்று பெயர் பெற்றார், அப்படியாயின் வயதானவர் ஒருவரும் இருந்தார் போலும் !

இருந்தையூர்க் கொற்றன் புலவர்ை

தென்னுற்காடு ஜில்லாவிலே திருக்கோவலூர் தாலுக்கா விலே இருந்தை என்று ஒரு கிராமம் இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர் இப் புலவர்.

இடைக்காடனர்

இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவ்வூர் தஞ்சை ஜில்லா பட்டுக்கோட்டைத் தாலுக்காவில் உள்ளது.

ஐயூர் முடவனர்

ஐயூர் என்பது சோழ நாட்டிலே உள்ளதோர் ஊர். கடந்து செல்ல இயலாதவர் இவர் ; முடவர். தாமான் தோன்றிக் கோனிடம் சென்று பாடினர் வண்டியும் மாடுகளும் பரிசாகப் பெற்றார்.