பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 371

குட்டுவன்

மேற்குக் கடற் கரையிலே மாந்தை என்று ஒர் ஊர் இருந்தது. அவ்வூரின் அரசன். - கோசர்

நாலூர்க்கோசர் என்று அழைக்கப் பெற்றவர். ஆலமரத் தடியிலே கூடுவர். அரசியல் காரியங்களை ஆராய்வர்.

நன்னன்- --

பெரிய மாந்தோப்புகளை உடைய குறுநில ரன்னன். அந்த மாந்தோப்பிலே பழுத்த மாங்கனி ஒன்றைத் தின்றதற்காகக் கொலே தண்டனை விதித்தான் ஒரு பெண்ணுக்கு. பூழியர்

பூழி நாட்டினர். வெள்ளாட்டுத் தொகுதியை உடையவர். பொறையன்

மேற்குக் கடற்கரையிலே உள்ள தொண்டி எனும் பட்டினத் துக்கு உரியவன். கொல்லி மலையும் சிலகாலம் இவனதாக இருந்தது. பரணரால் பாராட்டப் பெற்றவன் இவன். மலையன்

முள்ளுர்க் கானத்தின் தலைவன். கபிலரால் பாராட்டப் பெற்றவன்.

விச்சிக்கோ

விச்சியர் குலத் தலைவன்.

பாடப் பெற்ற மலைகள்

அரலைக் குன்றம்

இது ஒரு மலை. எது என்று இப்போது சொல்வதற்கில்லே. ஏழில்

கொல்லன் அழிசி எனும் புலவர் இக் குன்று பற்றிக் குறிப்பிடுகிறார்,