பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 95

68. அம்பி அழுததும் அத்தான் வந்ததும்

“இன்று இரவு வருகிறேன்” என்றான்.

“வா’ என்றாள்.

ஏமாற்றி விடாதே !’ என்றான்.

‘இல்லை’ என்றாள்.

அன்று இரவு அவனைச் சந்திப்பதற்கு வேண்டிய தயாரிப்பு களுடன் காத்திருந்தாள். ஆனல் அது எவருக்கும் தெரியக் கூடாது. எனவே வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

இரவு எல்லோரும் படுத்தனர். தாயும் படுத்தாள். அருகிலே தனது சிறுவனப் படுக்கச் செய்தாள். அவனே அனைத்துக் கொண்டே துரங்கினுள். சிறிது தள்ளிப் படுத்திருந்தாள் அவள். ஆல்ை துரங்கவில்லை. எந்த நேரத்தில் அவன் வருவான் ? எழுந்து போகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘கம் மென்று வாச சீன வீ சி ய து சந்தனம். மலையிலே வளேந்த சந்தனத்தை மார்பிலே பூசி வந்து விட்டான் அவன். காதலியைக் கண்டுகளிக்க. -

சந்தன வாசனையை அறிந்தாள். சந்தோஷ மடைந்தாள். எழுந்தாள். மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்தாள். கொல் லேக் கதவைத் திறக்க முயன்றாள்.

‘ஆ’ என்று அழுதான் தம்பி.

‘அட சனியனே !’ என்று சபித்தாள். மெல்ல மறுபடியும் திரும்பினுள்.

வில்” என்று க்த்தின்ை மீண்டும்.

பூனை போல் ஒடி வந்து படுக்கையில் படுத்தாள். கண்களை மூடிக் கொண்டாள்.

சிறுவனின் அழுகை தொடர்ந்தது. துளக்கம் கலந்தாள் தாய். எனினும் கண்களைத் திறக்கவில்லை.

‘ச் ச் ச் என்று சமாதானம் செய்தாள் சிறுவ&ன.

அவன் ஒய்கிறதாக இல்லை.