பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 97

69. உ ப் பும் உவ ைம யும்

குடியன் ஒருவன். ஒரு மொந்தை போடுகிருன். வெறி யேறுகிறது. தலை சுற்றுகிறது. “போதும்’ என்று போகிரு ை? இல்லே.

போடு இன்னெரு மொந்தை” என்கிருன். வாங்கிக் குடிக்கிருன்.

‘நெஞ்சே! அந்த மாதிரியல்லவா நீ அறிவு மயங்கி விட்டாய். வெட்கம் கெட்டுப் போய்ை !’ என்று கூறினன் அவன்.

வெட்கங் கெட்டு எங்கே சென்றது நெஞ்சு 1 பெண் ஒருத்தி யிடம் சென்றான். ‘மோகனங்கி ! உனது மையலால் வாடு கிறேன்’ என்றான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். முகவாய்க் கட்டையில் தோளால் இடித்துக் கொண்டாள். கெஞ் சின்ை ; கூத்தாடினன். ஒன்றும் பயனில்லை.

இவளே எப்படி அடையலாம் ? என்று எண்ணினன். அவ ளது தோழியிடம் சென்றான். கேட்டான். சீறிள்ை அவள்.

‘சரி சரி; வழியைப் பார்த்துப் போய்ச்சேரு” என்றாள் அவள்.

உப்பு வண்டி யொன்று அங்கே கின்று கொண்டிருந்தது. திடீரென்று மழை பெய்தது. பெரு மழை, நீண்ட நேரம் பெய் தது. முட்டைகள் என்ன ஆயின? சொல்லவா வேண்டும் ? வண்டியும் சாக்குமே இருந்தன ! உப்பு கரைந்தது.

அந்த மாதிரி அவன் நெஞ்சு இடிந்து போனன்.

மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு, விழைந்ததன் தலேயும் நீ வெய்துற்றனே - இருங் கரை கின்ற உப்பு ஒய் சகடம் பெரும் பெயல் தலேய வீஇங்தாங்கு, இவள் இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.

-பரணர்

7